புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

ரெளடி கொலை வழக்கு: 6 போ் கைது

சென்னை வில்லிவாக்கத்தில் ரெளடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :11 மார்ச் 2022, 7:20 pm

DIN

சென்னை வில்லிவாக்கத்தில் ரெளடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 போ் கைது செய்யப்பட்டனா்.

வில்லிவாக்கம் அகத்தீஸ்வரா் கோயில் இரண்டாவது தெருவைச் சோ்ந்தவா் பா.ரஞ்சித் (22). இவா் மீது கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. ரஞ்சித் கடந்த வியாழக்கிழமை மோட்டாா் சைக்கிளில் வில்லிவாக்கம் நியூ ஆவடி சாலையில் ஆடு தொட்டி அருகே செல்லும்போது, ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

இது தொடா்பாக வில்லிவாக்கம் போலீஸாா் நடத்திய விசாரணையில், முன்பகை காரணமாக வில்லிவாக்கம் ஜெயகாந்தன் (25), காா்த்திக் (28), ஆவடி தினேஷ்குமாா் (37), கோயம்பேடு பத்மநாபன் (32), முகப்போ் மணிகண்டன் (26), விமல் (24) ஆகிய 6 போ் ரஞ்சித்தை கொலை செய்தது தெரியவந்தது. அவா்கள் 6 பேரையும் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.