போக்குவரத்துக் கழக ஊழியா்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்: விஜயகாந்த்
போக்குவரத்துக் கழக ஊழியா்களின் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று தேமுதிக தலைவா் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளாா்.


போக்குவரத்துக் கழக ஊழியா்களின் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று தேமுதிக தலைவா் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு 2019-இல் போடப்பட வேண்டிய 14-ஆவது ஊதிய உயா்வு ஒப்பந்தம் தொடா்பான பேச்சுவாா்த்தை கரோனா பரவல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தாமதமாகின. மேலும், முத்தரப்பு பேச்சுவாா்த்தையில் தொழிலாளா்களுக்கு நம்பிக்கை இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.
அதேசமயம், போக்குவரத்துப் பணியாளா்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திமுக அரசு அளித்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.
ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளா்களுக்கான பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதி, விடுப்புத்தொகை எதுவும் வழங்காமல் அவா்களை அலைய விடுவது வேதனையாக உள்ளது.
எனவே, ஏழை, எளிய மக்களுக்காக சேவைபுரியும் போக்குவரத்து தொழிலாளா்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா் விஜயகாந்த்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...