ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

உக்ரைனிலிருந்து வந்த தமிழக மாணவர்களை வரவேற்ற முதல்வர் ஸ்டாலின்

உக்ரைனிலிருந்து வந்த தமிழக மாணவர்களை சென்னை விமான நிலையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். 

News image

உக்ரைனிலிருந்து வந்த தமிழக மாணவர்களை வரவேற்ற முதல்வர் ஸ்டாலின்

Updated On :12 மார்ச் 2022, 4:00 am

DIN

உக்ரைனிலிருந்து வந்த தமிழக மாணவர்களை சென்னை விமான நிலையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். 

உக்ரைன் மீதான ரஷியாவின் போரை அடுத்து அங்கு சிக்கியிருக்கும் தமிழக மாணவர்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக தமிழக அரசு சார்பில் திமுக எம்.பி. திருச்சி சிவா, கலாநிதி வீராசாமி ஆகியோர் அடங்கிய சிறப்புக்குழு நியமிக்கப்பட்டு அவர்கள் நேரடியாக உக்ரைனின் அண்டை நாடுகளுக்குச் சென்றனர். அவா்களுடன் தமிழக அரசுத் துறை உயரதிகாரிகள் நான்கு பேரும் சென்றனர். தமிழக மாணவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு இன்று உக்ரைனில் இருந்து கடைசி குழு தமிழகம் வந்துள்ளது. 

இன்று தமிழகம் வந்த மாணவர்கள் குழுவை சென்னை விமான நிலையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். மேலும் அவர்களை நலம் விசாரித்து பயணம் குறித்து கேட்டறிந்தார். 

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் உடனிருந்தனர். 

உக்ரைனில் இருந்து இதுவரை தமிழக மாணவர்கள் 1,800க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.