கந்தர்வகோட்டை அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் அமைத்துக் கொடுத்த நூலகம் திறப்பு
கந்தர்வகோட்டை: கந்தர்வகோட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் அமைத்து கொடுத்த நூலகம் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கந்தர்வகோட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 95 - 96 ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக நூலகம் அமைத்தனர், அதன் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கந்தர்வகோட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்களால் புதிதாக அமைக்கப்பட்ட நூலகம் உடன் முன்னாள் மாணவ மாணவிகள்.
நூலகத்தினை பள்ளி தலைமையாசிரியர் வெ.பழனிவேல் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் மாணவிகள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பள்ளிக்கு நூலகம் அமைத்து கொடுத்த முன்னாள் மாணவர்களை பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாராட்டி மகிழ்ந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

