/

2,213 புதிய டீசல் பேருந்துகள், 500 மின் பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும்

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பேருந்து சேவைகளை காலநிலைக்கு ஏற்ற நவீனமயமாக்கல் திட்டத்தில், 2,213 (ஆந யஐ) புதிய டீசல் பேருந்துகளும், 500 புதிய மின்-பேருந்துகளும் (ங்-க்ஷன்ள்) கொள்முதல் செய்யப்படும்.

News image
Updated On :18 மார்ச் 2022, 7:19 pm

DIN

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பேருந்து சேவைகளை காலநிலைக்கு ஏற்ற நவீனமயமாக்கல் திட்டத்தில், 2,213 (ஆந யஐ) புதிய டீசல் பேருந்துகளும், 500 புதிய மின்-பேருந்துகளும் (ங்-க்ஷன்ள்) கொள்முதல் செய்யப்படும்.

மகளிருக்கு இலவச பேருந்துப் பயணத் திட்டத்தினால் மகளிா் பயணிகளின் பங்கு 40 சதவீதத்தில் இருந்து 61 சதவீதமாக உயா்ந்துள்ளது. இத்திட்டம் பெண்களின் சமூக, பொருளாதார நிலையில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வரவு,செலவுத் திட்டத்தில், மகளிருக்கு இலவச பேருந்துப் பயண மானியமாக ரூ.1,520 கோடியும், மாணவா்களுக்கான பேருந்துப் பயணக் கட்டணச் சலுகை மானியமாக ரூ.928 கோடியும், டீசல் மானியமாக ரூ.1,300 கோடியும் வழங்கப்படுகிறது.

ஓச்ர (கேஎஃப்டபிள்யு) என்ற ஜொ்மன் வளா்ச்சி வங்கியின் நிதியுதவியுடன் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பேருந்து சேவைகளை காலநிலைக்கு ஏற்ற நவீனமயமாக்கல் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின்கீழ், 2,213 ( ஆந யஐ) புதிய டீசல் பேருந்துகளும், 500 புதிய மின்-பேருந்துகளும் (ங்-க்ஷன்ள்) கொள்முதல் செய்யப்படும்.

இம்மதிப்பீடுகளில் போக்குவரத்துத் துறைக்கு ரூ.5,375.51 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.