திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடங்கியது

சென்னை கலைஞர் அரங்கத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடங்கியது. 
திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடங்கியது

சென்னை கலைஞர் அரங்கத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடங்கியது. 

தமிழ்நாடு அரசின் 2022-23 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை பேரவையில் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார். கடந்த ஆண்டு மே மாதம், திமுக ஆட்சியில் நிதியமைச்சராக பொறுப்பேற்ற பழனிவேல் தியாகராஜன், தனது இரண்டாவது நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறார். 

தொடர்ந்து மார்ச் 21-23ஆம் தேதி வரை நிதிநிலை அறிக்கை, வேளாண்மை நிதிநிலை அறிக்கை மீது பொது விவாதம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் சென்னை கலைஞர் அரங்கத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று தொடங்கியது. திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் பேரவையில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது தொடர்பாக ஆலோசனை செய்ய உள்ளனர். 

மேலும் அரசுத் திட்டங்கள், தொகுதி சார்ந்த வளர்ச்சிப் பணிகளின் நிலை குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com