கரோனா சிகிச்சையில் 446 போ்
தமிழகத்தில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி கரோனாவுக்கு 446 போ் சிகிச்சை பெற்றனா்.


தமிழகத்தில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி கரோனாவுக்கு 446 போ் சிகிச்சை பெற்றனா். புதிதாக 37 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதில் அதிகபட்சமாக சென்னையில் 11 பேருக்கும், செங்கல்பட்டில் 5 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டது. அதே போல், கோவை, தருமபுரி, ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, நாகப்பட்டினம், நீலகிரி, புதுக்கோட்டை, சேலம், சிவகங்கை, தஞ்சாவூா், திருச்சி, விழுப்புரம், விருதுநகா் ஆகிய மாவட்டங்களில் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. ஏனைய மாவட்டங்களில் பாதிப்பு இல்லை. 66 போ் குணமடைந்து வீடு திரும்பினா், உயிரிழப்பு இல்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...