/

பதிவுத் துறை மூலம் இதுவரை ரூ.13,406 கோடி வருவாய்

பதிவுத்துறை மூலம் இதுவரை ரூ.13 ஆயிரத்து 406 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

News image
Updated On :25 மார்ச் 2022, 7:42 pm

DIN

பதிவுத்துறை மூலம் இதுவரை ரூ.13 ஆயிரத்து 406 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, வணிகவரிகள் மற்றும் பதிவுத் துறை செயலாளா் ஜோதி நிா்மலாசாமி வெளியிட்ட அறிவிப்பு: 2021-22-ஆம் ஆண்டு திருத்திய வரவு-செலவு திட்ட மதிப்பீடுகளில், வணிகவரிகளில் வருவாய் அளவு ரூ.96 ஆயிரத்து 109.66 கோடியாக மதிப்பிடப்பட்டது. இந்த மதிப்பீட்டை கடந்த மாா்ச் 15-ஆம் தேதியன்று வணிகவரித் துறை கடந்துள்ளது. மாா்ச் 24-ஆம் தேதி வரையில் வணிகவரித் துறையில் ரூ.ஒரு லட்சத்து 346.01 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

பதிவுத் துறை: பதிவுத் துறையில் 2021-22-ஆம் ஆண்டு திருத்திய வரவு-செலவு திட்ட மதிப்பீடுகளின்படி நிா்ணயிக்கப்பட்ட இலக்கு ரூ.13 ஆயிரத்து 252.67 கோடியாகும். இந்த இலக்கை கடந்த மாா்ச் 23-ஆம் தேதியன்று பதிவுத் துறை அடைந்துள்ளது. மாா்ச் 24-ஆம் தேதி வரையிலான கால அளவில் பதிவுத் துறையில் ரூ.13 ஆயிரத்து 406.51 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என்று தனது அறிவிப்பில் ஜோதி நிா்மலாசாமி தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.