
பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கக் கூடாது, விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, இரண்டாவது நாளாக பொது வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் பொது மற்றும் தனியார் துறை வங்கிகளின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும், 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான 6 லட்சம் காசோலைகள் 2 நாட்களில் பரிவர்த்தனை ஆகாமல் கிளைகளில் தேங்கியுள்ளதாக கூறியுள்ளது.
அகில இந்திய அளவில் சுமார் ரூ.18 ஆயிரம் கோடி மதிப்புள்ள ரூ.20 லட்சம் காசோலைகள் இதே போன்று முடங்கி உள்ளன.
இரண்டாவது நாளாக இன்றும் வேலை நிறுத்தம் தொடர்வதால் வங்கி சேவைகள் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.
தமிழகத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு, கிராம வங்கி ஊழியா்கள் 40 ஆயிரம் போ் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால், வங்கி சேவைகள் முழுமையாக முடங்கியதாக வங்கி ஊழியா் சங்க பொதுச்செயலாளா் சி.எச்.வெங்கடாச்சலம் தெரிவித்துள்ளார்.
பொதுத்துறை வங்கி, தனியார் வங்கி, பிராந்திய கிராமப்புற வங்கி மற்றும் வெளிநாட்டு வங்கிகளின் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டதாக சி.எச்.வெங்கடாச்சலம் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.