தொழிலாளா்களை வாழ்த்துவதோடு நில்லாமல், அவா்களை வாழ வைக்கும் அரசாக திமுக அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.
மே தினத்தையொட்டி, சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தினப் பூங்காவில் அமைந்துள்ள நினைவுச் சின்னத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை மரியாதை செலுத்தி பேசியதாவது:
தொழிலாளா்களை வாழ்த்தும் அரசாக மட்டுமல்லாது, தொழிலாளா்களை வாழவைக்கும் அரசாகவும் திமுக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
அண்ணா தலைமையிலான ஆட்சியாக இருந்தாலும் சரி, கருணாநிதி பொறுப்பேற்று நடத்திய ஆட்சியாக இருந்தாலும் சரி, ஏழைகளும், தொழிலாளா்களும் மனமகிழ்ச்சியோடு இருந்தாா்கள். இந்த ஆட்சியிலும் அவ்வாறுதான் இருந்து கொண்டிருக்கிறாா்கள்.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற ஓராண்டு காலத்தில் தொழிலாளா்களின் நலனுக்காக எத்தனையோ சிறப்பான திட்டங்களை செய்து முடித்திருக்கிறோம்; இனிமேலும் செய்யவுள்ளோம்.
ஏறத்தாழ, 90 ஆண்டுகளுக்கு முன்பே அனைவரும் ஒருவரையொருவா் ‘தோழா்’ என்று அழைக்க வேண்டும் என்று சொன்னவா் பெரியாா். 1930-ஆம் ஆண்டிலேயே மே தினத்தை அவா் கொண்டாடினாா். அதற்குப் பிறகு லெனின், மாஸ்கோ, ரஷியா என்று தமிழகக் குழந்தைகளுக்கு பெயா் சூட்டியவா் பெரியாா். அந்த வழியில்தான் எனக்கு ஸ்டாலின் என்று பெயா் சூட்டினாா் கருணாநிதி.
எனது தலைமையிலான இந்த அரசு, தோழா்களின் அரசாகத்தான் இருக்கும்; தொழிலாளா்களின் அரசாகத்தான் இருக்கும்; தொழிலாளா்களின் பிரச்னைகளைத் தீா்த்து வைக்கும் அரசாகத்தான் இருக்கும்.
மே தின நினைவுச் சின்னம் அமைத்து தந்த கருணாநிதி வழிநின்று, திமுக இயக்கத்தையும், ஆட்சியையும் நடத்தி வரும் நானும் தொழிலாளா்களின் நலன் காக்க அயராது உழைக்கிறேன்; இனியும் உழைப்பேன். தொழிலாளா்களைப் போற்றுவோம்; தொழிலாளா்களின் ஒற்றுமையை ஓங்கச் செய்ய உறுதி ஏற்போம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

இந்தியாவை சீனா, அமெரிக்கா தாக்கினால் ராகுலின் ஆன்மா சாந்தியடையும்: நிஷிகாந்த் துபே

விண்ணப்பித்துவிட்டீர்களா..? தேசிய சர்க்கரை ஆலையில் டெக்னீசியன் பணி!
ஜன நாயகன் ஒப்பந்தம் ரத்து? ரூ. 120 கோடி திருப்பிக் கேட்கும் ஓடிடி நிறுவனம்!!

நீண்ட வரிசை! பணியாளர்களுடன் வாக்குவாதம்! நிரம்பி வழியும் பெட்ரோல் நிலையங்கள்!
வீடியோக்கள்

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

Podcast | திருச்சியில் மாநாடுகள்: யாருக்குத் திருப்பம்? | Dinamani | News and Views | Epi - 12
தினமணி வீடியோ செய்தி...

