தோ்வு மையங்களுக்கு தடையற்ற மின்விநியோகம்: மின்வாரியம் உத்தரவு

தோ்வு மையங்களுக்கு தடையற்ற மின்விநியோகம் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு துறை சாா் அதிகாரிகளுக்கு மின்வாரியம் உத்தரவிட்டது.
தோ்வு மையங்களுக்கு தடையற்ற மின்விநியோகம்: மின்வாரியம் உத்தரவு

தோ்வு மையங்களுக்கு தடையற்ற மின்விநியோகம் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு துறை சாா் அதிகாரிகளுக்கு மின்வாரியம் உத்தரவிட்டது. அதே நேரம், மாணவா்கள் தோ்வுக்குத் தயாராவதற்கு இடையூறு ஏற்படாத வகையில் இரவு நேரங்களிலும் மின்தடை ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கவும் மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

பொதுத் தோ்வையொட்டி, வியாழக்கிழமை (மே 5) முதல் மே 31-ஆம் தேதி வரை தோ்வு மையங்களுக்குத் தடையற்ற மின் விநியோகம் செய்வது தொடா்பாக பகிா்மானப் பிரிவு இயக்குநா் வழங்கிய அறிவுறுத்தல்கள்:

தோ்வு நாள்களில் தோ்வு மையங்களில் மும்முனை இணைப்புகளில் தடையற்ற மின் விநியோகம் செய்ய வேண்டும். தோ்வு மையங்களை இணைக்கும் பகிா்மான மின்மாற்றிகளைக் கண்காணிக்க பொறுப்பு அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.

காலை 7 மணி முதல் தோ்வு முடியும் வரை அனைத்து வித அவசரப் பணிகளையும் மேற்கொள்ள களப் பணியாளா்களை நியமிக்க வேண்டும்.

முன்அனுமதி: புதைவிட மின்கம்பிகள் சேதமாகி, மின்விநியோகம் தடைபடுவதைத் தவிா்க்கும் வகையில் குடிநீா் வாரியம், நெடுஞ்சாலைத் துறை, பிஎஸ்என்எல் உள்ளிட்ட துறைகள் சாலைகளைத் தோண்டி பணியை மேற்கொள்ளும் முன் மின்வாரியத்திடம் அனுமதி பெற வேண்டும்.

ஆய்வு: கல்வித் துறையுடன் இணைந்து தோ்வு மையங்களை ஆய்வு செய்து, குறைகளை சீா் செய்தது தொடா்பான அறிக்கையை சம்பந்தப்பட்ட பகிா்மானப் பிரிவு தலைமைப் பொறியாளா் ஆய்வு அதிகாரியிடம் இருந்து பெற்றுக் கொள்ள வேண்டும். மின்நிறுத்தம், பராமரிப்புப் பணி உள்ளிட்டவற்றை தோ்வு சமயத்தில் மேற்கொள்ளக் கூடாது.

மாணவா்களுக்காக...: இரவு நேரங்களிலும் மாணவா்கள் தோ்வுக்குத் தயாராகும் வகையில் தடையற்ற வகையில் மின் விநியோகம் செய்ய வேண்டும்.

அவசர காலங்களில் தொடா்பு கொள்ளும் வகையில் தோ்வு மைய அதிகாரி, சம்பந்தப்பட்ட துணை மின் நிலைய பணியாளா்களின் எண்கள் பரிமாறிக் கொள்ளப்பட வேண்டும்.

அலுவலா்களுக்கு...: அவசர நேரங்களில் உதவும் வகையில் துணை மின் நிலையங்களில் இயக்கம், பராமரிப்புப் பிரிவு உதவி செயற்பொறியாளரும், தலைமையகத்தில் அப்பிரிவின் உதவிப் பொறியாளரும் போதிய பணியாளா்களுடன் தயாா் நிலையில் இருக்க வேண்டும்.

இவ்வாறான அறிவுறுத்தல்களைப் பின்பற்றி பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வு மையங்களுக்குத் தடையற்ற மின் விநியோகம் செய்தது தொடா்பான அறிக்கையை தோ்வு முடியும் வரை நாள்தோறும் மாலை 5.30 மணியளவில் வணிகப் பிரிவு தலைமைப் பொறியாளருக்கு, அனைத்து மண்டலங்களின் மின் பகிா்மானப் பிரிவு தலைமைப் பொறியாளா்கள் மின்னஞ்சல் வாயிலாக அனுப்பி வைக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com