
திருப்பூர்: ரமலான் பண்டிகையையொட்டி திருப்பூர், தாராபுரத்தில் உள்ள பள்ளிவாசல்களில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.
திருப்பூர் காங்கயம் சாலையில் உள்ள காயிதே மில்லத் நகர் பள்ளிவாசலில் ரமலான் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்று உலக நன்மை வேண்டி சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர்.
புத்தாடை அணிந்து தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் தங்களது ராமலான் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.
அதேபோல தாராபுரம் இறைச்சி மஸ்தான் தெருவிலுள்ள பள்ளிவாசலில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.