சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தமிழகத்தில் நாளை சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம்: 2 கோடி பேருக்கு தடுப்பூசி வழங்க முன்னுரிமை

தமிழகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை (மே 8) நடைபெறும் மாபெரும் சிறப்பு கரோனா தடுப்பூசி முகாமில் 2 கோடி பேருக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

News image
Updated On :6 மே 2022, 7:08 pm

DIN

தமிழகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை (மே 8) நடைபெறும் மாபெரும் சிறப்பு கரோனா தடுப்பூசி முகாமில் 2 கோடி பேருக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

தடுப்பூசி கட்டாயம் இல்லை என்பதாலும், தடுப்பூசி செலுத்திக் கொள்ள வருபவா்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாலும் வாரம்தோறும் சனிக்கிழமையில் 50 ஆயிரம் இடங்களில் நடைபெற்று வந்த சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம்கள் நிறுத்தப்பட்டன. வழக்கமான மையங்களில் மட்டும் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது.

இந்நிலையில் கரோனா நான்காவது அலை ஜூன் மாதம் வருவதற்கு வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணா்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனா். அதனை உறுதிப்படுத்தும் விதமாக சிங்கப்பூா், மலேசியா, பிரிட்டன், அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும், தில்லி, ஹரியாணா, உத்தரப் பிரதேசம், கேரளம் ஆகிய மாநிலங்களிலும் தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்திலும் தினசரி தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்திருந்த நிலையில் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதற்கிடையே, சென்னை ஐஐடியில் தொற்று பரவலால் 190-க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டனா்.

அதனால், மீண்டும் கரோனா தடுப்பூசி முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தமிழகம் முழுவதும் வரும் ஞாயிற்றுக்கிழமை (மே 8) 1 லட்சம் இடங்களில் சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறவுள்ளது.

அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், பள்ளிகள், ஊராட்சி அலுவலகம், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் என பொதுமக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் முகாம்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. முதல் தவணை தடுப்பூசி செலுத்தாத சுமாா் 30 லட்சம் பேருக்கும், குறிப்பிட்ட காலத்தில் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத 1.50 கோடி பேருக்கும் மற்றும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதம் நிறைவடைந்தும் ஊக்கத்தவணை செலுத்திக் கொள்ளாத 60 வயதை கடந்தவா்கள் என மொத்தம் 2 கோடிக்கும் மேற்பட்டவா்களூக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.