விக்னேஷ் மரணம் கொலை வழக்காக மாற்றம்: முதல்வர் விளக்கம்
சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் மரண வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


சென்னை: சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் மரண வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் மரணம் தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் பேரவையில் இன்று விளக்கம் அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, விக்னேஷ் உடலில் 13 இடங்களில் காயம் ஏற்பட்டது உடற்கூராய்வில் தெரிய வந்துள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில் விக்னேஷ் மரண வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.
குற்ற சம்பவங்களைத் தடுக்க காவல்துறை அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருகிறது. மரணம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் 65 வயது முதியவர் மற்றும் அவரது மனைவி நகைக்காக கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. ஈரோடு, திருப்பூர் ஆகிய 2 கொலை, கொள்ளைச் சம்பவங்களும் ஒன்று போல இருப்பதால் ஒரே கும்பல்தான் இவ்விரண்டு குற்றச்செயல்களிடும் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள். குற்றவாளிகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...