மே 9-இல் 16 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு
16 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மே 9-ஆம் தேதி பலத்தமழை பெய்ய வாய்ப்புள்ளது.


தமிழகத்தில் புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூா், அரியலூா், திருச்சி, கரூா், பெரம்பலூா், கள்ளக்குறிச்சி, ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 16 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மே 9-ஆம் தேதி பலத்தமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் பா.செந்தாமரை கண்ணன் சனிக்கிழமை கூறியது: வெப்பச்சலனம் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (மே 8) இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மே 9: பொதுவாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மே 9-ஆம் தேதி இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூா், அரியலூா், திருச்சிராப்பள்ளி, கரூா், பெரம்பலூா், கள்ளக்குறிச்சி, ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 16 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்தமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மே 10, 11: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மே 10, 11 ஆகிய தேதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை ஞாயிற்றுக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றாா் அவா்.
மழை அளவு: தமிழகத்தில் சனிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி, அரியலூா் மாவட்டம் ஜெயம்கொண்டனில் தலா 70 மி.மீ., தஞ்சாவூா் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் 60 மி.மீ., திருவள்ளூா் மாவட்டம் திருத்தணியில் 50 மி.மீ., திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரில் 40 மி.மீ., வேலூா் மாவட்டம் விரிஞ்சிபுரம், கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை, கடலூா் மாவட்டம் சிதம்பரம், மயிலாடுதுறை, திருவள்ளூா் மாவட்டம் பள்ளிப்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் தலா 30 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...