தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மன்னார்குடியில் மின்சாரம் தாக்கி முன்னாள் ராணுவ வீரர், சினைமாடு பலி

மன்னார்குடியில் மின்சாரம் தாக்கி முன்னாள் ராணுவ வீரர், சினைமாடு உயிரிழந்தார். 

News image
Updated On :7 மே 2022, 4:49 am

DIN

மன்னார்குடியில் மின்சாரம் தாக்கி முன்னாள் ராணுவ வீரர், சினைமாடு உயிரிழந்தார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த மேலவாசல் ஆற்றங்கரை தெருவைச் சேர்ந்தவர் அ. உமாபதி (55) .மனைவி, 2 மகன், மகள் உள்ளனர். உமாபதி, இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்தவர். கடந்த மூன்று ஆண்டுக்கு பணி ஓய்வு பெற்று சொந்த ஊரான மேலவாசலில் வசித்து வருவதுடன் திருவாரூரில் உள்ள தனியார் வங்கியில் காவலாளியாக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், சனிக்கிழமை உமாபதி தான் வளர்க்கும் இரண்டு பசு மாடுகளை மேச்சலுக்கு கொண்டு செல்வதற்காக அதனை ஓட்டிக் கொண்டு  மேலவாசல் மயானம் அருகே தரிசு நிலப்பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியே ஆழ்துளை கிணறுக்கான மின் மோட்டருக்கு இணைப்புக்கு செல்லும் மின் கம்பி அறுந்து கிடந்ததில் சினையாக இருந்த பசு மாடு மிதித்தில் மின்சாரம் மாட்டின் மீது பாய்ந்ததில் மாடு கீழே விழுந்ததைப் பார்த்து அதனைக் காப்பாற்ற முயன்ற உமாபதியின் மீது மின்சாரம் பாய்ந்ததில் காயமடைந்த உமாபதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். சினை பசுமாடும் உயிரிழந்தது.
இதில், மற்றொறு பசு மாடு தப்பித்து ஓடி விட்டது.

இதுகுறித்து , தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த மன்னார்குடி காவல் நிலைய போலீஸார் உமாபதியின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து. புகாரின் பேரில் வழக்குப் பதிந்து மேல் விசாரணை செய்கின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.