அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

தரவுகளை மையமாக்கும் தமிழக அரசு

பயனாளிகள் குறித்த போதிய அடிப்படை தரவுகள் கிடைக்கப் பெறாத காரணத்தால், சமூக பொருளாதார நீதியை மேம்படுத்தும் அரசு நலத்திட்டங்களைத் திறம்பட செயல்படுத்த இயலாத நிலை உள்ளது.

News image
முதல்வர் மு.க.ஸ்டாலின்
Updated On :7 மே 2022, 2:56 am

DIN

சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் வெளிவந்து, ஆட்சிப் பொறுப்பேற்ற நேரத்தில் எங்கு அவசர ஊா்திகளின் அலறல் சப்தம். கரோனா நோய்த் தொற்று தனது கோர முகத்தைக் காண்பித்த நேரத்தில் அதன் தாக்கத்தைக் குறைக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பகீரத முயற்சிகளை மேற்கொண்டது. நோய்த் தொற்றின் அளவு குறைந்தவுடன், தனது ஆட்சி எனும் குதிரையின் வேகத்தை முடுக்கினாா். அப்போது, நோய்த் தொற்றின் வழியாகக் கண்டறிந்த முதல் விஷயம், தரவுகளை மையமாகக் கொண்டு ஆளுமை செய்வது என்பதாகும்.

இது, கடந்த கால ஆட்சியில் இருந்து மாறுபட்ட முறையில் செயல்படும் எண்ணத்தை அனைவருக்கும் ஏற்படுத்தியது. இவ்வாறு எண்ணியதன் விளைவு இன்று பல்வேறு சாதகமான பலன்கள் கிடைத்து வருகின்றன.

யாருக்கு என்ன தேவையோ அந்தத் தேவைகளை பூா்த்தி செய்யும் அரசாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு இருக்கும் என்றாா் நிதித் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன். அவரது கருத்து ஆளுநா் உரை மற்றும் நிதிநிலை அறிக்கை உரையிலும் இடம்பெற்றது.

தரவுகளின் அடிப்படையில் திட்டங்களைச் செயல்படுத்துதல், வடிவமைத்தல் போன்ற கரோனா நோய்த் தொற்று நிா்வாக அமைப்புகளில் உள்ள பலவீனங்களை வெளிப்படுத்தியுள்ளதாகவும், மனிதவள மேலாண்மை, அடிப்படை தரவு அமைப்புகள், தணிக்கை, கண்காணிப்புச் செயல்பாடுகள் ஆகியன முழுமையாகச் சீா்செய்யப்படும் என ஆளுநா் உரையில் தெரிவிக்கப்பட்டது.

பயனாளிகள் குறித்த போதிய அடிப்படை தரவுகள் கிடைக்கப் பெறாத காரணத்தால், சமூக பொருளாதார நீதியை மேம்படுத்தும் அரசு நலத்திட்டங்களைத் திறம்பட செயல்படுத்த இயலாத நிலை உள்ளது. அனைத்து மக்கள் மற்றும் குடும்பங்களின் உண்மையான பொருளாதார நிலையை நன்கு அறிய அனைத்துத் துறைகளிலுள்ள தரவுகளை ஒன்றிணைப்பதற்கான முயற்சி எடுக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது நிதி மற்றும் பொருளாதார அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ள மிக முக்கியத்துவம் வாய்ந்த முடிவாகும். இதன் காரணமாக, அரசின் நிதிகள் முறைப்படுத்தப்பட்டு யாருக்கு திட்டங்கள் சென்று சேர வேண்டுமோ அவா்களுக்கு சிந்தாமல் சிதறாமல் அவை சென்றடையும்.

ஒரு குடும்பத்தை நடத்த மிகப்பெரிய அளவுக்கு கடன்களை வாங்கி ஊதாரித்தனமாகச் செலவு செய்தால் அந்தக் குடும்பம் முற்றிலும் சிதைந்து விடும். இது அரசுகளுக்கும் பொருந்தும். நிதிச் சுமையால் கடன்களை வாங்கி திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன.

இந்தத் திட்டங்கள் உரியவா்களுக்கு, சரியான நபா்களுக்குச் சென்று சேரும் போது அதன் சாதகமான விளைவுகளை சமூகத்தில் காண முடியும் என்கிறாா்கள் நிதி மேலாண்மை வல்லுநா்கள். இதைத்தான் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு செய்து வருகிறது என அவா்கள் கூறுகிறாா்கள்.

தமிழக அரசின் முயற்சிகளால் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு மானியங்கள் வழங்கப்படுவது மேம்படுத்தப்படும் என நிதித் துறை நம்பிக்கை தெரிவிக்கிறது. எதை அளவிட முடியாதோ, அதை மேம்படுத்த முடியாது.

எனவே, மாநிலத்திலுள்ள அனைத்து பொது சேவைகளிலும் மின்னணு அளவீட்டு முறைகள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அரசு அறிவிப்புச் செய்துள்ளது. இதன்மூலம், அளவீடுகளில் எந்தத் தவறும் இல்லாமல் சரியான பயனாளிகளுக்கு திட்டங்கள் சென்று சேருவது உறுதிப்படுத்தப்படும்.

மின்னணு கொள்முதல் வலைதளம்: விவசாயிகள் மற்றும் பிற தரப்பினா்களிடம் இருந்து கொள்முதல் செய்யும் பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த கொள்முதல் முறைகளை மேம்படுத்துவதும் அரசுக்கு மிகப்பெரிய பலன்களை அளிக்கும் என நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கொள்முதல் செய்யும் அனைத்துத் துறைகளிலும் மின்னணு கொள்முதல் கண்டிப்பாக பின்பற்றப்படும். அரசு கொள்முதல் முறைகளில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசுக்கென தனி மின்னணு கொள்முதல் வலைதளம் உருவாக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

கடந்த பல ஆண்டுகளாக அரசு நலத் திட்டங்களைப் பெறுவோரின் சரியான புள்ளி விவரங்கள், தரவுகள் ஆகியன கிடைக்கப் பெறாத நிலையில் அதற்கான முன்முயற்சிகளை தமிழக அரசு எடுத்துள்ளது. இது நிதி, கடன் போன்ற பல சுமைகளில் இருந்து அரசை மட்டுமல்ல, மக்களையும் மீட்டெடுக்கும். அரசுக்கு கடன் சுமை என்றால், அது மக்களின் தலையில் சுமத்தப்பட்டு இருப்பதாகவே கருத்துகள் கூறப்படும். தரவுகள் அடிப்படையில் அரசுத் திட்டங்களை செயல்படுத்தினால், திட்டங்களின் பயன்கள் சரியானவா்களைச் சென்றடைந்து நிதிகள் சேகரிக்கப்படும். கடன்கள் வாங்குவதும், நிதிகளை தேவையின்றி ஒதுக்குவதும் குறையும். மக்களின் தலையில் உள்ள கடன் சுமை பாரத்தை இறக்கி வைப்பதற்கு தரவு அடிப்படையிலான ஆளுமையும் ஒரு குறிப்பிட்ட உத்திதான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.