பாதுகாப்பு வசதி இல்லாமல் ஷவர்மா விற்பனை செய்யும் கடைகளை மூட நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
போதிய பாதுகாப்பு வசதி இல்லாமல் ஷவர்மா விற்பனை செய்யும் கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சேலம் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரியில் தடுப்பூசி முகாமை, ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.








