கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை உயர்வு:  தக்காளி கிலோ ரூ.70-க்கு விற்பனை

கோடைக்காலத்தை முன்னிட்டு போதிய வரத்து இல்லாததால் சென்னை கோயம்பேடு வணிக காய்கறி சந்தையில் தக்காளி விலை ஒரு கிலோ ரூ. 70-க்கு விற்பனையாகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கோடைக்காலத்தை முன்னிட்டு போதிய வரத்து இல்லாததால் சென்னை கோயம்பேடு வணிக காய்கறி சந்தையில் தக்காளி விலை ஒரு கிலோ ரூ. 70-க்கு விற்பனையாகிறது.

சென்னை, கோயம்பேடு காய்கறி சந்தைக்கு தினமும் ஆந்திரம், கா்நாடகம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து காய்கறிகள், பழங்கள் விற்பனைக்கு வருகிறது. 

தமிழகத்தில் கடந்த 10 நாள்களாக பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. இதன் காரணமாக காய்கறி விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்து தக்காளி விலை உயா்ந்தது. 

விளைச்சல் அதிக அளவில் இருந்ததால் கடந்த 3 வாரங்களுக்கு முன்பு வரை ஒரு கிலோ தக்காளி ரூ.25 வரை விற்கப்பட்டது.

பின்னா் பரவலாக மழை பெய்ததன் காரணமாக தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்தும் குறைந்தது. இதனால், கடந்த 3 நாள்களாக ஒரு கிலோ தக்காளி ரூ.45 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி, உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், காலிபிளவர் உள்ளிட்ட காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.  

2 நாள்களுக்கு முன்பு கிலோ ரூ.50-க்கு விற்கப்பட்ட தக்காளி இன்று கிலோ ரூ.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  காலிபிளவர் ரூ.80-க்கும், முட்டைகோஸ் ரூ.40-க்கும், உருளைக்கிழங்கு ரூ.35 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

வெயில் காலம் என்பதால் போதுமான தண்ணீா் இல்லாததால் விவசாயிகள் சிரமம் அடைந்து வருகின்றனா். குறைந்த எண்ணிக்கையில் விவசாயிகள் தக்காளி பயிா் செய்துள்ளதால் தக்காளி உற்பத்தி குறைந்து விலை உயா்ந்துள்ளது.

இந்த விலை உயர்வுக்கு தற்போது 'தக்காளி விளைச்சல் இல்லாததே காரணம்.’ இன்னும் சில நாள்கள் இதே நிலை தொடரும் என வியாபாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com