அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

குஜராத்தில் காங்கிரஸ் அடுத்த ஆட்சி அமைக்கும்: ராகுல் காந்தி

குஜராத்தில் காங்கிரஸ் அடுத்த ஆட்சி அமைக்கும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்தார். 

News image
Updated On :10 மே 2022, 8:32 am

DIN

குஜராத்தில் காங்கிரஸ் அடுத்த ஆட்சி அமைக்கும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்தார். 

பணக்காரர்களுக்கு ஒன்று, ஏழைகளுக்கு ஒன்று என்று இரண்டு இந்தியாவை உருவாக்கிய பாஜக மாதிரியில், ஏழைகளுக்குச் சொந்தமான நாட்டின் வளங்களை சில பணக்காரர்களுக்கு வழங்கப்படுகின்றன என்று அவர் கூறினார். 

பழங்குடியினர் பேரணியில் உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி,

மாநிலத்தின் பாஜக தலைமையிலான அரசு பழங்குடியினரின் உரிமைகளைப் பறித்துள்ளது பாஜக அரசு உங்களுக்கு எதையும் தராது, உங்களிடமிருந்து அனைத்தையும் பறிக்கும். 

நீங்கள் உங்கள் உரிமைகளைக் கேட்டு பறிக்க வேண்டும், அப்போதுதான் உங்களுக்குச் சொந்தமானது கிடைக்கும் என்று அவர் கூறினார்.

மேலும், பழங்குடியின மக்கள் தங்கள் கடின உழைப்பால் குஜராத்தில் சாலைகள், பாலங்கள், கட்டடங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளை உருவாக்குகிறார்கள். ஆனால் அதற்கு ஈடாக உங்களுக்கு என்ன கிடைத்தது? உங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. நல்ல கல்வியும் இல்லை, சுகாதார சேவையும் இல்லை என்றார்.

பிரதமர் மோடி குஜராத்தில் முதல்வராக இருந்ததையே இந்தியாவிலும் செய்கிறார். இரண்டு இந்தியாவை உருவாக்குகிறார். ஒன்று பணக்காரர்களுக்காகவும், மற்றொன்று சாமானியர்களுக்காகவும் என்று ராகுல் காந்தி பிரதமர் மோடியை தாக்கி பேசியுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.