சீர்காழி அருகே பூங்குடி கிராமத்தில் 6 ஆயிரம் லிட்டர் டீசலுடன் டேங்கர் லாரி மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்தது. ஓட்டுநர் சிறு காயத்துடன் தப்பிய நிலையில் ஆபத்தை உணராமல் டீசலை போட்டிப்போட்டுப் பிடித்துச் சென்றனர் கிராம மக்கள்.
_.jpeg)
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை அடுத்த கொள்ளிடம் ஆற்றில் அமைந்துள்ள அரசு மணல் குவாரிக்கு தனியார் டீசல் விற்பனை நிலையத்திலிருந்து டேங்கர் லாரி மூலம் டீசல் கொண்டு செல்லப்பட்டது. சுமார் 6,000 லிட்டர் டீசலுடன் சென்ற டேங்கர் லாரி பூங்குடி கிராமத்தில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மின்கம்பத்தில் மோதி அருகே இருந்த வயலில் தலைகுப்புற கவிழ்ந்தது. இவ்விபத்தில் ஓட்டுநர் சிறு காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் லாரியை மீட்கும் போது டேங்கரில் இருந்து வெளியேறிய டீசலை ஆபத்தை உணராமல் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் பாட்டில்கள், கேன்கள், வாலிகளில் போட்டிப்போட்டு பிடித்துச் சென்றனர். போலீசார் அவர்களை எச்சரித்த போதும் அதனைப் பொருட்படுத்தாமல் கிடைக்கும் பாட்டில்களில் எல்லாம் டீசலை பிடித்துச் சென்றனர். பின்னர் கவிழ்ந்த டேங்கர் லாரியை மீட்க க்ரேன் வரவழைக்கப்பட்டது. இந்த விபத்தால் மின்கம்பி அறுந்ததால் அப்பகுதியில் 4 மணி நேரத்துக்கு மேல் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 2 - நேரலை!

91 பந்துகளில் 233 ரன்கள் குவித்த அபிஷேக் சர்மா ருத்ர தாண்டவம்!

தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு காவிரி முக்கியம் இல்லை: மாணிக்கம் தாகூர்

காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்று தாயகம் திரும்பியவர்களுக்கு உற்சாக வரவேற்பு!
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



