நேபாள வெள்ளம்! பலி எண்ணிக்கை 500-ஐ கடந்தது! மீட்புப் பணிகள் தீவிரம்!உள் மாவட்டங்களில் இன்று முதல் வெப்பம் சற்று அதிகரிக்கும்இந்திய - நேபாள பயணிகள் பேருந்து சேவை: இன்றும் நாளையும் தற்காலிகமாக நிறுத்தம்சென்னையிலிருந்து கைலாஷ் யாத்திரை சென்ற 49 போ் மாயம்ஆவடியில் ஆண்டுதோறும் 150 பீரங்கி வாகனங்கள் சீரமைப்பு: அமைச்சா் ராஜ்நாத் சிங் தகவல்மின்சார வாகனங்களால் 5 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகும்: நிதின் கட்கரி தகவல்அரசு அலுவலகங்களில் சோதனை: ரூ.1.18 கோடி ‘ஜிபே’ பரிவா்த்தனை கண்டுபிடிப்புஉக்ரைன் நகரங்களில் ரஷியா தீவிர தாக்குதல்: 2 போ் உயிரிழப்பு

உரமூட்டை ஏற்றி வந்த லாரி சாலை தடுப்பில் மோதி விபத்து: பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியீடு

மதுரையில் இருந்து கரூருக்கு உரமூட்டை ஏற்றி வந்த லாரி சாலையின் நடுவே உள்ள தடுப்பில் மோதி விபத்துக்குள்ளான பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

சாலையின் நடுவே உள்ள தடுப்பில் மோதி விபத்துக்குள்ளான லாரி.

Published On :1 பிப்ரவரி 2024, 2:44 pm IST


மதுரையில் இருந்து கரூருக்கு உரமூட்டை ஏற்றி வந்த லாரி சாலையின் நடுவே உள்ள தடுப்பில் மோதி விபத்துக்குள்ளான பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

மதுரை பாலரங்காபுரம் லாரி குடோனில் இருந்து கரூருக்கு உரமூட்டை ஏற்றி வந்த லாரி அரசரடி பிரதான சாலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநர் சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரை கவனிக்காத நிலையில், லாரி தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. 

தொடர்ந்து லாரியின் முன் பக்கம் முற்றிலுமாக சேதம் அடைந்தது. லாரி சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக சம்பவ இடத்திலேயே நின்றிருந்த நிலையில், குடோனில் இருந்து மாற்று லாரி வரவழைக்கப்பட்டு உர மூட்டைகளை இடமாற்றம் செய்த பிறகு லாரியை பொக்லைன் இயந்திரம் கொண்டு சாலையிலிருந்து அப்புறப்படுத்தினர்.

இதுதொடர்பாக மதுரை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து லாரி விபத்துக்குள்ளான பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.