சென்னை: பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து, செங்கொடியின் ஈகத்தை தற்போது நினைவுகூர்ந்திட வேண்டியது நாம் அவருக்குச் செலுத்தும் நன்றிக் கடன் என தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
செங்கொடி என்பவர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரை தூக்கிலிடக்கூடாது எனக் கோரி ஆகஸ்டு மாதம் 28 ஆம் நாள் 2011 அன்று காஞ்சிபுரத்தில் தீக்குளித்து தற்கொலை செய்துக் கொண்ட பெண் போராளி ஆவார்.
தொல்.திருமாவளவன் அவர்கள் டிவிட்டரில் கூறியிருந்ததாவது:
மக்கள் மன்றத்தைச் சார்ந்த தங்கை செங்கொடியின் ஈகத்தை தற்போது நினைவுகூர்ந்திட வேண்டியது நாம் அவருக்குச் செலுத்தும் நன்றிக் கடனாகும். பேரறிவாளன் உள்ளிட்ட மூவரையும் மரணத் தண்டனையிலிருந்து காத்திட அவர் தன்னைத்தானே மாய்த்துக் கொண்டார். அவருக்கு எமது செம்மாந்த நன்றிகலந்த வீரவணக்கம்.