ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கள்ளச்சாராய விற்பனை அதிகரிப்பு: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

திமுக ஆட்சியில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை கள்ளச்சாராய விற்பனை அதிகரித்துள்ளதாகக் கூறி, எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :20 மே 2022, 7:40 pm

DIN

திமுக ஆட்சியில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை கள்ளச்சாராய விற்பனை அதிகரித்துள்ளதாகக் கூறி, எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த பிறகு போலி மதுபானங்கள், வெளி மாநிலங்களிலிருந்து கடத்தி வரப்பட்டு மாநிலம் முழுவதும் தாராளமாக விற்கப்படுவதாகச் செய்திகள் வருகின்றன.

முதல்வா், அமைச்சா்கள், தலைமைச் செயலாளா் உள்ளிட்ட உயா் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக பயணிக்கும் மெரீனா கடற்கரைச் சாலையில், காவல் துறைத் தலைவா் அலுவலகம் எதிரே கடற்கரை மணலில் எண்ணிலடங்கா கள்ளச் சாராய ஊறல்கள், போலி மது பாட்டில்கள் புதைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவது வெட்கக்கேடானது. இதுதொடா்பாக ஓரிரு பெண்களை மட்டும் கைது செய்து, பிரச்னையின் தீவிரத்தை மூடி மறைக்க காவல் துறை முயல்கிறதோ என்ற சந்தேகம் மக்கள் மனதில் எழுந்துள்ளது.

சென்னை முதல் குமரி வரை கள்ளச் சாராய விற்பனை சில காவல் துறையினா், ஆளும் கட்சியினா் ஆதரவோடு கனஜோராக நடைபெறுகிறது.

கள்ளச் சாராயம், போதைப் பொருள்கள் பாதிப்பிலிருந்து மக்களைக் காக்க காவல் துறையினரை சுதந்திரமாகச் செயல்பட தமிழக அரசு அனுமதிக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.