ஈரோடு: கீழ்பவானி பாசன கால்வாயில் கான்கிரீட் போடும் திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் பெருந்துறை அருகே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கீழ்பவானி பாசன கால்வாயில் புனரமைக்க அரசு ரூ.710 கோடி ஒதுக்கியுள்ளது. பாசன கால்வாய் கரைகள் 60 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டுள்ளது. அது பல இடங்களில் பழுதடைந்து உள்ளது. எனவே, 55 கிலோ மீட்டர் நீளத்திற்கு கால்வாய் இன் கரைகளை கான்கிரீட் தளமாக அரசு திட்டமிட்டுள்ளது.
இதனால், பாசன கால்வாயில் இருந்து நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம் பாதிக்கப்படும், பல கிராமங்களில் குடிநீர் பஞ்சம் ஏற்படும். இதனால் திட்டத்தை கைவிட வேண்டும் என்று பல விவசாய சங்கங்கள் கூறிவருகின்றன.

கீழ்பவானி பாசன கால்வாயில் கான்கிரீட் போடும் திட்டத்தை எதிர்த்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள்.
அதேசமயம், சில விவசாய சங்கங்கள் இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகின்றன. திட்டத்தை எதிர்த்து வரும் விவசாய சங்கங்கள் பல தொடர் போராட்டங்களை நடத்துகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயத் துறை அமைச்சர் முத்துசாமி இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் உடன்பாடு காணப்பட வில்லை. எனவே, இப்பிரச்னையை நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் தீர்த்து வைப்பார் என்று சில நாள்களுக்கு முன்பு கூறினார்.
ஆனால், இன்று பெருந்துறை அருகே இத் திட்டத்தை எதிர்ப்பவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்திற்கு போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் ரவி தலைமை வகித்தார். விவசாய சங்கத் தலைவர்கள் வெங்கடாஜலம், ஈ.வி.கே.சண்முகம், துளசிமணி, கிருஷ்ணமூர்த்தி மற்றும் பல்வேறு பஞ்சாயத்து தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரு நடைமேடை வியாபாரிகள் பலி! காய்கறி விற்பவர்கள் வளாகத்தைத் தொடக் கூடாது: கார்கே

மதுரை வந்தடைந்த கள்ளழகர்! பக்தர்கள் உற்சாக வரவேற்பு!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? பிஎஸ்என்எல் நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

பூந்தொட்டியில் மறைந்திருந்த பாம்பு! பத்திரமாக மீட்பு! | CBE
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


