மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

தமிழகத்தில் புதிதாக 56 பேர் கரோனாவால் பாதிப்பு

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 56 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 39 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

News image
கோப்புப்படம்
Updated On :25 மே 2022, 2:46 pm

DIN

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 56 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 39 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

கடந்த சில நாள்களாகவே தமிழகத்தில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கடந்த மாதத்தை விட குறைந்தே காணப்படுகிறது. தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட தரவுகள் அடங்கிய விவரங்களை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. 

 அதில், இன்று புதிதாக 56 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 34,55,040-ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் ஒரு உயிரிழப்பு கூட பதிவாகவில்லை. இதனால் மொத்த உயிரிழப்பு 38,025 ஆக உள்ளது. இன்று ஒரு நாளில் மட்டும் 39 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 34,16,644-ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒரு நாளில் மட்டும் 15,164 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.