இந்துக் கடவுளை புண்படுத்தும் விடியோ மீது நடவடிக்கை எடுக்க அதிமுக கோரிக்கை

இந்துக் கடவுளை அவமதிக்கும் விடியோவைக் கண்டித்து, யூடியூப் சேனல் மீதும், வீடியோ கிளிப்பை பதிவேற்றியவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: இந்துக் கடவுளை அவமதிக்கும் விடியோவைக் கண்டித்து, யூடியூப் சேனல் மீதும், விடியோ கிளிப்பை பதிவேற்றியவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக புதன்கிழமை கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த விடியோவை வெளியிட்ட யூடியூப் சேனலை உடனடியாக தடை செய்ய வேண்டும். மேலும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் மத நல்லிணக்கம் பாதிக்கப்படும் மற்றும் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துவிடும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

கோயில் நகரமான சிதம்பரத்தில் சிவபெருமான் பக்தர்கள் போராட்டம் நடத்துவதைக் குறிப்பிட்ட ஓ.பன்னீர்செல்வம், சிவனின் வடிவமான நடராஜப் பெருமானின் பிரபஞ்ச நடனத்தை அவமதிக்கும் விடியோ பதிவை அதிமுக  கண்டிப்பதாக கூறியுள்ளார்.

கந்த சஷ்டி கவசம், முருகப்பெருமானைப் போற்றும் பிரார்த்தனை மற்றும் பாடலை இழிவுபடுத்திய 'கருப்பர் கூட்டம்' மீது 2020 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

யூடியூப் சேனல் மீதும், பதிவேற்றம் செய்தவர்கள் மீதும் திமுக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com