பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

‘அதிமுக எதிர்க்கட்சியாக செயல்படவில்லை’: சசிகலா

அதிமுக எதிர்க்கட்சியாக எந்தவகையிலும் செயல்படவில்லை என்று வி.கே. சசிகலா புதன்கிழமை விமர்சித்துள்ளார்.

News image

சசிகலா(கோப்புப்படம்)

Updated On :25 மே 2022, 6:14 am

அதிமுக எதிர்க்கட்சியாக எந்தவகையிலும் செயல்படவில்லை என்று வி.கே. சசிகலா புதன்கிழமை விமர்சித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்ற சசிகலா செய்தியாளர்களிடம் பேசியதாவது:

“அதிமுகவில் என்னை இணைக்க முடியாது என சொல்வதற்கு அவர்கள் யார்? ஒரு இயக்கம், கட்சியின் தலைவர் தொண்டர்களால்தான் தேர்வு செய்யப்படுவார்கள். நான் அதிமுகவில் இணைவது தொண்டர்கள் கையில் தான் உள்ளது.

தற்போது அதிமுகவில் இருக்கும் நிர்வாகிகள் அனைவரும் என்னை எதிர்க்கவில்லை. பதவிக்கு ஆசைப்படும் சிலர் எதிர்க்கின்றனர். அதிமுக முக்கிய நிர்வாகிகள் என்னுடன் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் யார் என்று வெளிப்படையாக கூற முடியாது. விரைவில் எனது தலைமையில் கட்சி இயங்கும் என 100 சதவிகிதம் நம்பிக்கை உள்ளது. அதிமுக எதிர்க்கட்சியாக எந்தவகையிலும் செயல்படவில்லை” எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.