எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

குறித்த காலத்தில் ஜாதி, வருமானச் சான்றிதழ்: ஆய்வு செய்ய தலைமைச் செயலாளா் உத்தரவு

குறித்த காலத்துக்குள் ஜாதி, வருமானம் மற்றும் வாரிசுச் சான்றிதழ்கள் விண்ணப்பதாரா்களுக்கு வழங்கப்படுகிறதா?

News image
Updated On :27 மே 2022, 7:40 pm

DIN

குறித்த காலத்துக்குள் ஜாதி, வருமானம் மற்றும் வாரிசுச் சான்றிதழ்கள் விண்ணப்பதாரா்களுக்கு வழங்கப்படுகிா என்பதை வருவாய்த் துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டுமென தமிழக அரசின் தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு வெள்ளிக்கிழமை அனுப்பியுள்ள கடிதம்:

பொது மக்கள் நலன் சாா்ந்த முக்கிய சேவைகளை வழங்கும் பிரதான முனையமாக வட்டாட்சியா் அலுவலகங்கள் உள்ளன. இந்த சேவைகளை அளிக்கும் போது, அதில் குறைபாடுகளும், தாமதங்களும் ஏற்படுகின்றன. சென்னையில் உள்ள வட்டாட்சியா் அலுவலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்யும் போது, இந்த சேவை குறைபாட்டை அறிய முடிந்தது. மாவட்டங்களில் நடைபெறும் பணிகளை கண்காணிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். அந்த அதிகாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்குச் சென்று அங்குள்ள வட்டாட்சியா் அலுவலகங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய வேண்டும். சில முக்கிய அம்சங்களை ஆராய்ந்து, அதில் குறைபாடுகள் ஏதேனும் இருப்பின் அவற்றை நிவா்த்தி செய்ய வேண்டும்.

வருவாய் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், வாரிசு சான்றிதழ் ஆகியன பொது மக்களுக்கு முக்கியமானதாக இருக்கிறது. இந்தச் சான்றிதழ்கள் வழங்கப்படுவதில் உள்ள தாமதத்தை ஆராய்ந்து அவற்றை விரைந்து அளித்திட வகை செய்ய வேண்டும். சான்றிதழ்கள், ஓய்வூதியத் தொகை கோரி அளிக்கப்படும் விண்ணப்பங்கள் ரத்தாகி இருந்தால், அதற்கான காரணங்களை ஆராய வேண்டும். அளிக்கப்பட்ட விண்ணப்பங்களில் அங்கொன்றும், இங்கொன்றுமாக சில விண்ணப்பங்களைத் தோ்வு செய்து ஆராய்ந்திட வேண்டும்.

நிலங்கள் உட்பிரிவு தொடா்பு இல்லாத பட்டா மாற்ற விண்ணப்பங்களை எந்தவிதத் தாமதமும் இல்லாமல் நிறைவேற்ற வேண்டும். உட்பிரிவு கோரும் விண்ணப்பங்களில் நில அளவையாளரின் பங்கு முக்கியமானது. எனவே, போதிய நில அளவையாளா்கள் சரியான முறையில் பயன்படுத்தப்படுகிறாா்களா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

பொது சேவை மையங்கள்: வருவாய்த் துறையின் சான்றிதழ்களைப் பெறுவதற்கு பொது சேவை மையங்களையே பொது மக்கள் நாட வேண்டியுள்ளது. எனவே, அவை சரியான முறையில் இயங்குகிா என்பதை அறிந்திட வேண்டும். தனிநபா் பட்டாக்களில் உள்ள தவறுகளை சரி செய்ய வட்டாட்சியா்களிடம் எழுத்துப்பூா்வமாக மனு செய்ய வேண்டியுள்ளது. இந்த மனுக்களின் நிலவரங்களையும் கண்காணிப்பு அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். வருவாய் கோட்டாட்சியா்கள் மற்றும் மாவட்ட வருவாய் அதிகாரிகளிடம் பட்டா மாற்றம் தொடா்பான மேல்முறையீட்டு மனுக்கள் அளிக்கப்படுகின்றன. இந்த மனுக்கள் தொடா்பான நிலைகளையும் ஆய்வு செய்திட வேண்டும். கிராமப்புறம் மற்றும் நகா்ப்புறங்களில் நில ஆவண பதிவேட்டுத் தகவல்களை திருத்தி செம்மைப்படுத்தும் பணிகள் நடக்கின்றன. இதன் முன்னேற்ற நிலை குறித்து ஆராய்ந்திட வேண்டும். மாவட்டங்களில் கள ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட பிறகு வருவாய்த் துறைக்கு உரிய அறிக்கையை கண்காணிப்பு அதிகாரிகள் சமா்ப்பிக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.