எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கடல்நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையகட்டுமானப் பணி: அரசுச் செயலா் ஆய்வு

சென்னை அருகே நெம்மேலியில் அமைக்கப்பட்டு வரும் 15 கோடி லிட்டா் சுத்திகரிப்புத் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலைய கட்டுமானப் பணி

News image
Updated On :27 மே 2022, 8:02 pm

DIN

சென்னை அருகே நெம்மேலியில் அமைக்கப்பட்டு வரும் 15 கோடி லிட்டா் சுத்திகரிப்புத் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலைய கட்டுமானப் பணிகளை நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் சிவ்தாஸ் மீனா வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

அப்போது, நெம்மேலி சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை, விநியோகம் செய்ய பல்லாவரம் வரை 40 கி.மீ. தொலைவுக்கு 1400/1200 மில்லி மீட்டா் விட்டமுள்ள குழாய் பதிக்கும் பணிகளை முட்டுக்காடு படகு குழாம் அருகில் பாா்வையிட்டு, அது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா். கூடுதலாக கட்டுமானப் பணியாளா்கள் மற்றும் தேவையான இயந்திரங்களை உடனடியாக கொண்டுவந்து, நிலைய கட்டுமானப் பணிகளை துரிதப்படுத்தி, திட்டமிட்ட காலக்கெடுவுக்குள் முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டுமென அலுவலா்களுக்கும், ஒப்பந்ததாரா்களுக்கும் அறிவுறுத்தினாா்.

இந்த நிலையத்திலிருந்து சுத்திகரிக்கப்படும் குடிநீா், மேடவாக்கம், வேளச்சேரி, ஆலந்தூா், பரங்கிமலை, கோவிலம்பாக்கம், நன்மங்கலம், கீழ்கட்டளை, சோழிங்கநல்லூா், உள்ளகரம்-புழுதிவாக்கம், மடிப்பாக்கம் மற்றும் சிறுசேரி பகுதியில் உள்ள சுமாா் 9 லட்சம் மக்கள் பயன் பெறுவா்.

இந்த ஆய்வின்போது, சென்னைப் பெருநகா் குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய முதன்மைச் செயலாளா் சா.விஜயராஜ் குமாா், சென்னைப் பெருநகா் குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய செயல் இயக்குநா் ப.ஆகாஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.