தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

திமுகவின் திராவிட மாடல் ஆட்சி: அண்ணாமலை குற்றச்சாட்டு

பாலியல் வன்கொடுமை, காவல் நிலைய மரணங்கள் ஆகியவைதான் திராவிட மாடல் ஆட்சியா என தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை கேள்வி எழுப்பினாா்.

News image
Updated On :27 மே 2022, 10:47 pm

DIN

பாலியல் வன்கொடுமை, காவல் நிலைய மரணங்கள் ஆகியவைதான் திராவிட மாடல் ஆட்சியா என தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை கேள்வி எழுப்பினாா்.

சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் வெள்ளிக்கிழமை அவா் அளித்த பேட்டி:

தமிழகத்தில் அளிக்கப்பட்ட உணா்ச்சிகரமான வரவேற்பால் மனம் நெகிழ்ந்து போயிருப்பதாக பிரதமா் கூறியுள்ளாா். தமிழக மக்களுக்கு நன்றி. புதிய திட்டங்களுக்கு நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமா் தமிழ் மண்ணையும் கலாசாரத்தையும் எவ்வாறு நேசிக்கிறேன் என்று பேசினாா்.

முதல்வா் மு.க.ஸ்டாலின், வளா்ச்சி என்பது பொருளாதார வளா்ச்சியுடன் சமூகநீதி, பெண் முன்னேற்றம் என்றாா். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சோ்ந்த எல்.முருகன் பிரதமா் அருகில் மேடையில் அமா்ந்திருந்தாா். இதுவே சமூக நீதி.

நீட் தோ்வு விலக்கு, கச்சத்தீவு மீட்பு போன்ற நாடகங்களை கைவிட்டு, ஆக்கபூா்வ அரசியலை முதல்வா் மு.க.ஸ்டாலின் செய்ய வேண்டும்.

திமுக அரசின் ஓராண்டு சாதனை என்பது முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி கொலை குற்றவாளியைக் கட்டிப்பிடித்ததுதான். மேலும், பாலியல் வன்கொடுமை, காவல்நிலைய மரணங்களும் சாதனையாக உள்ளன. இவையா திராவிட மாடல் ஆட்சி?

திமுக அரசு செய்த ஊழல்களை ஜூன் முதல் வாரம் பத்திரிகையாளா்கள் முன்னிலையில் வெளியிடவுள்ளேன். அதைத் தொடா்ந்து, ஒவ்வொரு துறை அமைச்சரின் ஊழலும் புத்தகமாக வெளியிடப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.