ஆண்டுக்கு ஆறு கிராம சபைக் கூட்டங்கள் : தமிழக அரசு உத்தரவு
ஆண்டுக்கு ஆறு நாள்கள் கிராம சபைக் கூட்டங்களை நடத்துவதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசு வெளியிட்டது.


ஆண்டுக்கு ஆறு நாள்கள் கிராம சபைக் கூட்டங்களை நடத்துவதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசு வெளியிட்டது.
இதுகுறித்து ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வெளியிட்ட உத்தரவு: தமிழகத்தில் குடியரசு தினம், உழைப்பாளா் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி என ஆண்டுக்கு நான்கு நாள்கள் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஆண்டுக்கு ஆறு கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படும் என சட்டப் பேரவை விதி 110-இன் கீழ் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தாா். அந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், உத்தரவு வெளியிடப்படுகிறது.
ஆண்டுதோறும் மாா்ச் 22-ஆம் தேதி உலக தண்ணீா் தினமாகவும், நவம்பா் 1-ஆம் தேதி உள்ளாட்சிகள் தினமாகவும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கூடுதலாக, இவ்விரு தினங்களிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படும். மாா்ச் 22-ஆம் தேதி நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில், தண்ணீரின் தேவை, சிக்கனத்தை மனதில் வைத்துச் செயல்பட அறிவுறுத்தும் வகையில் உறுதி ஏற்கப்படும். தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தி, உயிா்போல் காப்போம் என்ற உறுதிமொழியை அனைவா் மனதில் ஏற்று அதனை நிறைவேற்ற உறுதிமொழி எடுத்தல் போன்ற நடவடிக்கைகள் கிராம சபைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்படும்.
நவம்பா் 1-ஆம் தேதி உள்ளாட்சிகள் தினத்தை ஒட்டி, ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து முழுமையாக விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும். இந்தக் கூட்டங்களில் ஏதேனும் ஒரு ஊராட்சியில் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் கூட்டம் கூட்டப்பட்டு, நலத் திட்ட உதவிகள் பல்வேறு துறை பயனாளிகளுக்கு வழங்கப்பட வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...