மேட்டூர் அணை நீர்வரத்து குறையத் தொடங்கியது
காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை தணிந்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வியாழக்கிழமை காலை வினாடிக்கு 8,464 கன அடியாக இருந்த நீர் வரத்து, இன்று வெள்ளிக்கிழமை காலை வினாடிக்கு 8,058 க


காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை தணிந்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வியாழக்கிழமை காலை வினாடிக்கு 8,464 கன அடியாக இருந்த நீர் வரத்து, இன்று வெள்ளிக்கிழமை காலை வினாடிக்கு 8,058 கன அடியாகக் குறைந்தது.
நீர்வரத்து குறைந் நிலையில் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு நேற்று இரவு 8 மணி முதல் வினாடிக்கு 10,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் நேற்று மேட்டூர் அணை நீர்மட்டம் இனி மெல்ல குறையத் தொடங்கும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்று காலை 117.92 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 118.11 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 90.48 டி.எம்.சி.யாக உள்ளது. அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...