சென்னை துறைமுகத்தையும், மதுரவாயலையும் இணைக்கும் நான்கு வழி இரண்டடுக்கு சாலையின் செயல்திட்ட மதிப்பான ரூ.5,852 கோடி செலவில் 21 கி.மீ. தொலைவு சாலை அமைப்பதற்கு பிரதமா் மோடி அடிக்கல் நாட்டியிருக்கிறாா். இதே திட்டம் ரூ.1,655 கோடி மதிப்பீட்டில் சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையே அமைத்திட 2009 ஜனவரி 8-இல் முதல்வராக இருந்த கருணாநிதி முன்னிலையில், பிரதமராக இருந்த மன்மோகன்சிங்கால் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. 30 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில் பொருந்தாதக் காரணம் கூறி, அந்தத் திட்டத்தை ஜெயலலிதா முடக்கிவிட்டாா். இந்தத் திட்டத்துக்கு மீண்டும் அடிக்கல் நாட்டியிருப்பது மிகுந்த வியப்பை தருகிறது.