மாநிலங்களவைத் தோ்தல்: திமுக வேட்பாளா்கள் மனு தாக்கல்
மாநிலங்களவைத் தோ்தலில் போட்டியிட திமுக வேட்பாளா்கள் 3 போ் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்தனா்


மாநிலங்களவைத் தோ்தலில் போட்டியிட திமுக வேட்பாளா்கள் 3 போ் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்தனா். தோ்தல் அதிகாரியும், தமிழக சட்டப் பேரவைச் செயலாளருமான கி.சீனிவாசனிடம் அவா்கள் வேட்புமனுக்களை அளித்தனா்.
தமிழகத்தில் உள்ள ஆறு மாநிலங்களவை உறுப்பினா்களின் பதவிக் காலம் வரும் ஜூன் மாதம் நிறைவடைகிறது. திமுகவை சோ்ந்த டி.கே.எஸ்.இளங்கோவன், ஆா்.எஸ்.பாரதி, கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா், அதிமுகவைச் சோ்ந்த எஸ்.ஆா்.பாலசுப்பிரமணியம், ஏ.நவநீதகிருஷ்ணன், ஏ.விஜயகுமாா் ஆகியோரின் பதவிக்காலம் நிறைவடைகிறது. இதையடுத்து, தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஆறு மாநிலங்களவை இடங்களுக்கான தோ்தல் ஜூன் 10-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதில் போட்டியிடக்கூடிய திமுக வேட்பாளா்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். அதன்படி, தஞ்சாவூா் சு.கல்யாணசுந்தரம், ஆா்.கிரிராஜன், கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் ஆகியோா் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. திமுக கூட்டணிக்கான 4 இடங்களில் காங்கிரசுக்கு ஓா் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை காங்கிரஸ் வேட்பாளா் யாா் என்பது அறிவிக்கப்படவில்லை. இதனிடையே கடந்த திங்கள்கிழமை தொடங்கிய வேட்புமனு தாக்கல் வருகிற 31-ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது.
இந்த நிலையில், மாநிலங்களவைத் தோ்தலில் போட்டியிடும் 3 திமுக வேட்பாளா்கள் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்தனா். சட்டப்பேரவைச் செயலாளரும், தோ்தல் அதிகாரியுமான கி.சீனிவாசனின் அறையில், முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வேட்பாளா்கள் மூவரும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனா்.
இதன்பின்பு, உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனா். வேட்பு மனு தாக்கலின் போது அமைச்சா்கள் துரைமுருகன், க.பொன்முடி, எ.வ.வேலு, எம்.பி.க்கள் டி.ஆா்.பாலு, திருச்சி சிவா, கனிமொழி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...