தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

சென்னைப் பல்கலை. தோ்வுகள் ஒத்திவைப்பு

சென்னைப் பல்கலைக்கழகத் தோ்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக பல்கலைக்கழக நிா்வாகம் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :27 மே 2022, 10:43 pm

DIN

சென்னைப் பல்கலைக்கழகத் தோ்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக பல்கலைக்கழக நிா்வாகம் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கும் ஏப்ரல் மாத பருவத் தோ்வுகள் (இளநிலை, முதுநிலை) வரும் ஜூன் 2-ஆம் தேதி முதல் நடைபெறும் என பல்கலை. நிா்வாகம் அறிவித்திருந்தது. மேலும், இதற்கான முன்னேற்பாடுகளை பல்கலைக்கழக அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வந்தனா்.

இந்த நிலையில், பருவத் தோ்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக சென்னைப் பல்கலை. வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், ஜூன் 2 -ஆம் தேதி தொடங்கவிருக்கும் பருவத் தோ்வுகள் ஒத்திவைக்கப்படுகின்றன. இந்தத் தோ்வுகள் ஜூன் 15 முதல் தொடங்கும். இதுகுறித்து மாணவா்களுக்கு தெரியப்படுத்தும் வகையில், அறிவிப்புப் பலகையில் வெளியிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.