ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

கைலாசத்தை விட்டு ஓட மாட்டோம்: சந்தேகம் கிளப்பும் நித்யானந்தா சிஷ்யை

கடந்த சில நாள்களாக நித்யானந்தாவின் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வரும் நிலையில், அது குறித்து அவரது சிஷ்யை ஒருவர் விளக்கம் அளித்துள்ளார்.

News image

கைலாசத்தை விட்டு ஓட மாட்டோம்: சந்தேகம் கிளப்பும் நித்யானந்தா சிஷ்யை

Updated On :27 மே 2022, 2:52 pm IST

கடந்த சில நாள்களாக நித்யானந்தாவின் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வரும் நிலையில், அது குறித்து அவரது சிஷ்யை ஒருவர் விளக்கம் அளித்துள்ளார்.

ஆனால், அவர் அளித்திருக்கும் விளக்கம்தான், நித்யானந்தாவுக்கு ஏதேனும் நேர்ந்திருக்குமோ என்ற சந்தேகத்தையே ஏற்படுத்தும் விதமாக அமைந்துவிட்டது.

நித்யானந்தாவின் சிஷ்யை என்று தன்னைக் கூறிக் கொண்டிருக்கும் மானத்யா ஆத்மபிரியா கூறியிருப்பதாவது, கடந்த சில நாள்களாக  சமூக வலைத்தளங்களில் போலியான பொய்யான செய்தியை சில கும்பல் ஒன்று பரப்பி வருகிறது. நித்யானந்தாவின் உடல் நலம் குறித்து புரளியை பரப்பி வருகிறது.

பரமசிவநாரே நேரடியாக திருமேனி தாங்கி வந்து நித்யானந்தாவாக திருப்பணியை செய்து கொண்டிருக்கிறார். செய்து முடித்தே தீருவார். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இதில், அவரிடம் நேரடியாக தீட்சைப் பெற்ற நானும், என் சக சீடர்களும் சேர்ந்து இந்தக்  கைலாசத்தை புனரமைப்பதில் தொடர்ந்து ஈடுபடுவோம் உறுதுணையாக இருப்போம். இதில் மாற்றுக் கருத்தில்லை.

நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், விட்டுவிட்டு ஒடிப்போக நாங்கள் ஒன்றும்  பாவாடை சன்னியாசிகள் அல்ல.  பரமசிவத்திடமிருந்து நேரடியாகவே தீட்சை பெற்ற சன்னியாசிகள். அதனால், இந்த கைலாசத்தை அழிக்கவும் முடியாது புனரமைப்பை நிறுத்தவும் முடியாது.  நித்யானந்தாவுடன் இணைந்து இதைச் செய்வோம் என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே நித்யானந்தா வேறு இப்படி சொல்லியிருந்தார்.. சமாதியில் இருக்கிறேன்; நான் இன்னும் சாகவில்லை: நித்தியானந்தா

இந்த விளக்கத்தில், விட்டு விட்டு ஓடிப்போவது குறித்தும், கைலாசத்தை நாங்கள் புனரமைப்போம் என்று கூறியிருப்பதும் சில பல சந்தேகங்களை மக்களுக்கு எழுப்புகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.