திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.


சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
வருகிற சனிக்கிழமை(மே 28) நடைபெறவிருப்பதாக கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சித் தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞா் அரங்கத்தில் இன்று(சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு கூட்டம் தொடங்கியுள்ளது.
கட்சியின் அறிவுறுத்தலின்படி, கூட்டத்தில் மாவட்டச் செயலாளா்கள்/மாவட்டப் பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்துகொண்டுள்ளனர்.
வருகிற ஜூன் 3 ஆம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்படுவதையொட்டி, அதுகுறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சென்னை ஓமந்தூராா் தோட்ட வளாகத்தில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் சிலை இன்று திறக்கப்படவுள்ளது. குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு சிலையை திறந்து வைக்கிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...