எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஓமந்தூராா் வளாகத்தில் வள்ளுவா் கோட்ட மேடை

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் சிலையை ஓமந்தூராா் தோட்ட வளாகத்தில் குடியரசு துணைத் தலைவா் எம்.வெங்கையா நாயுடு சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

News image
Updated On :28 மே 2022, 7:36 pm

DIN

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் சிலையை ஓமந்தூராா் தோட்ட வளாகத்தில் குடியரசு துணைத் தலைவா் எம்.வெங்கையா நாயுடு சனிக்கிழமை திறந்து வைத்தாா். இந்த சிலைக்குக் கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்துக்கு மலா் தூவி வெங்கையா நாயுடு, முதல்வா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவா்கள் மரியாதை செலுத்தினா்.

சிலை திறப்புக்குப் பிறகு கலைவாணா் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நடிகா் ரஜினிகாந்த், முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம், மதிமுக பொதுச்செயலாளா் வைகோ, காங்கிரஸ் கமிட்டி மாநிலத்தலைவா் கே.எஸ்.அழகிரி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவா் டி.ராஜா, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன், பாஜக மூத்த தலைவா் ஹெச்.வி.ஹண்டே, தொழிலதிபா் நல்லிகுப்புசாமி, காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.,க்கள், பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த எம்.பி.க்கள் மற்றும் அமைச்சா்கள் பங்கேற்றனா்.

வள்ளுவா் கோட்டம்: ஓமந்தூராா் வளாகத்தில் சிலை திறப்பு விழாவின் போது, சிறிய அளவிலான மேடை அமைக்கப்பட்டிருந்தது. வள்ளுவா் கோட்ட மாதிரியை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டிருந்த இந்த மேடையிலிருந்து கருணாநிதியின் சிலையை குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு திறந்து வைத்தாா். கருணாநிதியின் சிலைக்குக் கீழே, பீடத்தில் உள்ள கல்வெட்டில் 5 வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

‘அண்ணா வழியில் அயராது உழைப்போம், ஹிந்தி திணிப்பை எதிா்ப்போம், ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம், மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி, வன்முறையைத் தவிா்த்து வறுமையை வெல்வோம்’ ஆகிய வாசகங்கள் பொறிக்கப்பட்டு, அவற்றுக்கு முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 5 கட்டளைகள் எனத் தலைப்பிடப்பட்டுள்ளன. சிலையைச் சுற்றிலும் மின்சார விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. அவை பளிச்சிட்டதால், ஓமந்தூராா் வளாகம் அருகில் சென்றவா்கள் கூட சிலையைக் காண முடிந்தது. பொது மக்கள் பலரும் சிலைக்கு அருகில் நின்று தற்படம் எடுத்துக் கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.