எடப்பாடி பழனிசாமியிடம் வாழ்த்துப் பெற்றார் அன்புமணி
பாமக தலைவராகப் தேர்வு செய்யப்பட்டுள்ள அன்புமணி ராமதாஸ், இன்று எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.


பாமக தலைவராகப் தேர்வு செய்யப்பட்டுள்ள அன்புமணி ராமதாஸ், இன்று எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
பாமகவின் சிறப்பு பொதுக் குழுக் கூட்டம் சென்னை அருகே திருவேற்காட்டில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்றது. கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கூட்டத்துக்குத் தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்தில் கட்சியின் புதிய தலைவராக அன்புமணி ராமதாஸ் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். 25 ஆண்டுகளாக பாமகவை வழிநடத்தி வந்த ஜி.கே. மணி கட்சியின் கௌரவத் தலைவராகச் செயல்படுவார் என ராமதாஸ் அறிவித்தார்.
இதையும் படிக்க-பேருந்து மரத்தில் மோதி வங்கதேசத்தில் 10 பேர் பலி
கட்சியின் தலைவராக அன்புமணி அறிவிக்கப்பட்டதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இந்த நிலையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரை எடப்பாடி மு. பழனிசாமியை அவரது இல்லத்தில் இன்று பா.ம.க. புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அன்புமணி ராமதாஸ், நேரில் சந்தித்து, சால்வை அணிவித்து, பூங்கொத்து வழங்கி வாழ்த்துப் பெற்றார்.
அதே போல், எடப்பாடி மு. பழனிசாமி பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸுக்கு சால்வை அணிவித்து, பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து, பா.ம.க. முன்னாள் தலைவர் ஜி.கே.மணி, பா.ம.க. துணைப் பொதுச் செயலாளர் ஏ.கே.மூர்த்தி ஆகியோருக்கும் சால்வை அணிவித்து, பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...