

சென்னை மற்றும் அதன் புறநகரப் பகுதிகளில் நேற்று இரவு முதல் மழை பெய்து வந்த நிலையில், இன்று காலை மீண்டும் பலத்த மழை பெய்து வருகிறது.
நேற்று காலை 8.30 மணி முதல் இன்று காலை 4 மணி வரை பதிவான மழை நிலவரம்:
சென்னையில் அதிகபட்சமாக வில்லிவாக்கத்தில் 10 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது.
நுங்கம்பாக்கம் - 7.7 செ.மீ
நந்தனம் - 5.2 செ.மீ
பூந்தமல்லி - 4.5 செ.மீ
காரைக்கால் - 7.0 செ.மீ மழையும், நாகை - 4.5 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று மாலை தொடங்கிய மழை, தொடர்ந்து பெய்து வருகிறது.
இதையும் படிக்க: வடகிழக்குப் பருவமழை: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை
சென்னையின் புறநகர்ப் பகுதிகளான கூடுவாஞ்சேரி, பெருங்களத்தூர், வண்டலூர், மண்ணிவாக்கம், ஆவடி, ஊரப்பாக்கம், பள்ளிக்கரணை, சிட்லப்பாக்கம், பெரும்பாக்கம், கேளம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.