கூத்தாநல்லூர்: வேளுக்குடி குருக்கள் காலமானார்
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வேளுக்குடி குருக்கள் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று நள்ளிரவு காலமானார்.
வேளுக்குடி குருக்கள்
வேளுக்குடி குருக்கள்
கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அடுத்த வேளுக்குடி ஸ்ரீ கோமளாம்பிகை சமேத ஸ்ரீ ருத்ரகோடீஸ்வரர் கோயில், ஸ்ரீ அபயாம்பிகை சமேத கைலாசநாதர் கோயில், ஸ்ரீ வள்ளி ஸ்ரீதேவசேனா ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளிட்ட கோயில்களின் சிவாச்சாரியார், குருக்கள் சிவஸ்ரீ கி.சுப்பிரமணிய குருக்கள் (72) நேற்று (நவ.3, வியாழக்கிழமை) நள்ளிரவு காலமானார்.
உடல்நிலை சரியில்லாமல், திருவாரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று இரவு திடீரென ஏற்பட்ட நெஞ்வலியால் உயிரிழந்தார்.
இவருக்கு, சண்முகம் குருக்கள் (41) மற்றும் அகிலா மற்றும் சுபா என இரண்டு மகள்கள் உள்ளனர்.
வேளுக்குடியில் இன்று(வெள்ளிக்கிழமை) மாலை 3 மணியளவில் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது. தொடர்புக்கு - 9344408572.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...