ஆரஞ்சு நிற பால் பாக்கெட் விலை உயர்வு ஏன்? அமைச்சர் நாசர் விளக்கம்

ஆரஞ்சு நிற பால் பாக்கெட் விலை உயர்வு ஏன்? அமைச்சர் நாசர் விளக்கம்

தமிழகத்தில் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டின் சில்லறை விலையை லிட்டருக்கு ரூ.12 ஆக உயர்த்தியுள்ளதையடுத்து ஒரு லிட்டர் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டின் விலை ரூ.60 ஆக உயர்ந்துள்ளது. 
Published on

தமிழகத்தில் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டின் சில்லறை விலையை லிட்டருக்கு ரூ.12 ஆக உயர்த்தியுள்ளதையடுத்து ஒரு லிட்டர் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டின் விலை ரூ.60 ஆக உயர்ந்துள்ளது. 

இதுக் குறித்து செய்தியாளர்களிடம் அமைச்சர் நாசர் தெரிவித்ததாவது:

வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் ஆரஞ்சு நிற பால் (நிறைகொழுப்பு பால்) விற்பனை விலை மட்டும் உயர்த்தப்பட்டுள்ளது.  குஜராத், கர்நாடக மாநிலங்களை விட தமிழகத்தில் பால் விலை ரூ.10 குறைவாகும்.

விற்பனை விலையை பொறுத்தவரையில் நுகர்வோர்களின் நலன் கருதி சமன்படுத்தப்பட்ட பால் (Toned Milk, நீல நிறம்) மற்றும் நிலைப்படுத்தப்பட்ட பால் (Standardized Milk, பச்சை நிறம்) ஆகியவற்றின் விலையில் மாற்றமின்றி தற்போதைய நிலையே தொடரும்.

தற்போதுள்ள நிறைகொழுப்பு பால்(Full cream ஆரஞ்சு நிறம்) மாதாந்திர அட்டைதாரர்களுக்கு எவ்வித விலைமாற்றமின்றி லிட்டர் ஒன்றுக்கு ரூ.46-க்கு புதுப்பிக்கப்படும்.

நிறைகொழுப்பு பால் பொதுமக்கள் 40 சதவீதமும், வணிகரீதியாக 60 சதவீதமும் பயன்படுத்துகின்றனர். பொது நலன் கருதி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ.3 குறைந்து இருந்தார் என்று அமைச்சர் தெரிவித்தார்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com