தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணி ஒத்திவைப்பு!
தமிழகத்தில் நாளை(நவ.6) நடக்கவிருந்த ஆர்.எஸ்.எஸ். பேரணி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் நாளை(நவ.6) நடக்கவிருந்த ஆர்.எஸ்.எஸ். பேரணி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த அக். 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று பேரணி நடத்த ஆர்.எஸ்.எஸ். திட்டமிருந்தது. ஆனால், காவல்துறை அனுமதி மறுத்ததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி நாளை(நவ.6) தமிழகத்தில் பேரணி நடத்த காவல்துறை அனுமதி வழங்கியது.
அதேநேரத்தில் இது தொடர்பான வழக்கில் நேற்றைய தீர்ப்பில், பேரணியை உள் அரங்கிலோ அல்லது நான்கு சுவர்களுக்குளோ நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவிருப்பதால் நாளை(நவ.6) நடக்கவிருந்த ஆர்.எஸ்.எஸ். பேரணி ஒத்திவைக்கப்படுவதாக ஆர்.எஸ்.எஸ். தென் மண்டலத் தலைவர் வன்னியராஜன் கூறியுள்ளார்.
இதையும் படிக்க | 44 இடங்களில் ஆா்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனுமதி: உயா்நீதிமன்றம் உத்தரவு

மேலும், கடந்த 97 ஆண்டுகளாக தமிழகம் உள்பட நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் அணிவகுப்பு ஊர்வலங்களை அமைதியான முறையில் நடத்தி வருகிறோம் என்றும் சட்ட ரீதியாக இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதால் நாளை நடக்கவிருந்த ஊர்வலத்தை நடத்த இயலாது என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...