கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

திருச்சி விமான நிலையத்தில் ரூ.12.84 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்!

திருச்சி விமான நிலையத்தில் சனிக்கிழமை துபையிலிருந்து கடத்திவரப்பட்ட 12.84 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை வான் நுண்ணறிவுப் பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :5 நவம்பர் 2022, 6:31 am

திருச்சி விமான நிலையத்தில் சனிக்கிழமை துபையிலிருந்து கடத்தி வரப்பட்ட 12.84 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை வான் நுண்ணறிவுப் பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனா்.

துபையில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை இரவு இண்டிகோ விமானம் வந்தது. இதில் வந்த பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினா். அப்போது பயணி ஒருவரிடம் சோதனை மேற்கொண்டபோது, அவர் கொண்டு வந்த உடமைகளுக்குள் (ஆடைக்குள்) மறைத்து வைத்திருந்த 251 கிராம் கம்பி வடிவிலான தங்கம் பிடிப்பட்டது. 

இதனையடுத்து அந்த தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதன் மதிப்பு சுமார் ரூ.12.84 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.