இந்நிலையில் இரவு தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே உள்ள மன்னார் வளைகுடா கடற்பகுதியில் மீனவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது அப்பகுதிக்குவந்த இலங்கைக்கடற்படையினர் எல்லைதாண்டி வந்ததாகக் தெரிவித்து தங்கச்சிமடத்தைச் சேர்ந்த கே.கிறிஸ்டோபர் என்பவருக்குச்சொந்தமான படகையும் அதில் சென்ற மீனவர்கள் எஸ்.லியோன், ஜாய்சன், எஸ். எஸ்ரா, முருகன், நம்பு மிலன், காளிமுத்து, வினோத், நம்பு குமார் மற்றும் க.அந்தோணி ராயப்பன் என்பவருக்குச் சொந்தமான படகையும் அதில் சென்ற கே.அந்தோணி ராயப்பன், அருணாச்சலம், ஏ.பாண்டி, செந்தூர்பாண்டி, ஏ.ரபிஸ்டன், மருது, ஆர்.குமரன் ஆகிய 15 பேர்களையும் இரண்டு விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றுள்ளனர்.