
பொதுப் பிரிவினருக்கு10 சதவிகித இடஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மேல்முறையீடு செய்யப்படும் என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு மற்றும் பல மாநிலங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உயர்வகுப்பு ஏழைகளுக்கு 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கி இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் செய்யப்பட்ட 103-ஆவது திருத்தம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.
உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், விசிக தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திருமாவளவன் கூறுகையில், “முன்னேறியப் பிரிவினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இது சமூகநீதிக்கு, அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கூறுகளுக்கு எதிரானது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் விசிக சார்பில் மேல்முறையீடு செய்வோம்” என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.