பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10% இடஒதுக்கீடு யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு மற்றும் பல மாநிலங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உயர்வகுப்பு ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கி இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் செய்யப்பட்ட 103-ஆவது திருத்தம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.
உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10% இடஒதுக்கீடு யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாது என கூறியுள்ளார்.
சென்னையில் மோடியின் தழிழகம் என்ற புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசுகையில், மத்திய அரசு மற்றும் பல மாநிலங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உயர்வகுப்பு ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாது.
10% இடஒதுக்கீடு தொடர்பாக திமுக தவறான பிரசாரம் செய்கிறது. ஏழை மக்களுக்கு உதவவே 10% இடஒதுக்கீடு. இதனால் பட்டியலின, பிற்படுத்தப்பட்டவர்களின் சலுகை பறிபோகாது என அண்ணாமலை கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ரூ.3.73 கோடியில் மதுராந்தகம் பேருந்து நிலையம் திறப்பு

ஆற்காடு- விழுப்புரம் இடையே நான்கு வழிச்சாலைப் பணி தொடக்கம்

அமீரக நாடுகளில் இந்தியா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: துரை வைகோ எம்.பி.

அதிமுக தெருமுனை பிரசார கூட்டம்
வீடியோக்கள்

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

