மங்காவரத்தில் சாலையில் நாற்று நடும் போராட்டம் 

கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியம் மங்காபுரம் ஊராட்சியில் மங்காவரம் முதல் அப்பாவரம் வரை செல்லும் சாலையை சீரமைக்காததைக் கண்டித்து அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் சாலையில் நாற்று நடும் ஆர்ப்பாட்
மங்காவரத்தில் சாலையில் நாற்று நடும் போராட்டம் 
மங்காவரத்தில் சாலையில் நாற்று நடும் போராட்டம் 


மங்காபுரம் ஊராட்சியில் மங்காவரம் முதல் அப்பாவரம் வரை செல்லும் சாலையை சீரமைக்காததைக் கண்டித்து அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் சாலையில் நாற்று நடும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மங்காவரம் முதல் அப்பாவரம் வரை சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சாலை மிகவும் மோசமாகவும், சாலை முழுக்க பள்ளங்களில் மழைநீர் தேங்கியும் நிற்கிறது.

இதனால் இந்த சாலையில் செல்வோர் அடிக்கடி வாகன விபத்துகளை சந்திக்கின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்த சாலையை சீரமைக்க டெண்டர் போட்டும் இதுவரை பணி நடக்கவில்லை. இது குறித்து பொதுமக்கள் பலமுறை போராடியும்  நடவடிக்கை எடுக்கப்படாததால் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மங்காவரத்தில் சாலையில் நாற்று நடும் போராட்டத்தை நடத்தினர்.

இந்தப் போராட்டத்திற்கு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க வட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். உள்ளாட்சி ஊழியர் சங்க நிர்வாகி சூர்ய பிரகாஷ், விவசாய தொழிலாளர் சங்க வட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன், பொருளாளர் பாபு, மாவட்ட நிர்வாகி லோகநாதன் கண்டன உரையாற்றினர். 

தொடர்ந்து ஆண்களும் பெண்களும் சேர்ந்து சாலையில் நாற்று நட்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்து கண்டன கோஷம் எழுப்பினர்.

சம்பவ இடம் விரைந்த வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளர் ருத்ரமூர்த்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பழைய டெண்டர் ரத்து செய்யப்பட்டு விட்ட நிலையில், சாலையை மேம்படுத்த புதிதாக 1400 மீட்டருக்கு 70 லட்சம் ரூபாயில் திட்ட மதிப்பீடு அனுப்பப்பட்டுள்ளதாகவும், மாவட்ட ஆட்சியின் அனுமதி பெற்று விரைவில் சாலை பணி அமைக்கப்படும் எனவும் உறுதியளித்தார். 

ஒரு மாதத்திற்குள் சாலை பணி ஆரம்பிக்காவிட்டால், வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் அறிவித்து கலைந்து சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com