நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதிக்கோரி மாட்டுவண்டி தொழிலாளர்கள் சாலை மறியல்!

திருச்சிற்றம்பலத்தில் மாட்டு வண்டியில் மணல் அள்ளுவதற்கு அனுமதி வழங்கக்கோரி 500-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளை சாலையில் நிறுத்தி மாட்டுவண்டி தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.  

News image
Updated On :9 நவம்பர் 2022, 1:10 pm IST

தஞ்சாவூர்: திருச்சிற்றம்பலத்தில் மாட்டு வண்டியில் மணல் அள்ளுவதற்கு அனுமதி வழங்கக்கோரி 500-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளை சாலையில் நிறுத்தி மாட்டுவண்டி தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.  

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள திருச்சிற்றம்பலம் பகுதியில் மாட்டுவண்டியில் மணல் அள்ளுவதற்கு அனுமதி வழங்கவில்லை எனக் கூறி 500-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளை திருச்சிற்றம்பலம் கடைவீதியில் சாலையில் நிறுத்தி மாட்டுவண்டி தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பட்டுக்கோட்டை- மதுரை, பட்டுக்கோட்டை- புதுக்கோட்டை ஆகிய வழித்தடங்களில் அரை மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

தகவலறிந்து பட்டுக்கோட்டை டிஎஸ்பி பிரிதிவிராஜ் செளகான் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாட்டுவண்டி தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். 

தொடர்ந்து மாட்டுவண்டிகள் இந்த பகுதிக்கு வந்த வண்ணம் உள்ள நிலையில் மாட்டு வண்டிகள் அனைத்து சாலைகளிலும் நிறுத்தி வைக்கப்பட்டு திருச்சிற்றம்பலம் சாலைகள் மற்றும் கடைவீதிகள் முற்றுகையிடப்பட்டுள்ளதால்  போலீசாருக்கும் மாட்டுவண்டி தொழிலாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

இந்த நிலையில் தற்போது சுமூகப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இருந்தும் உடன்பாடு எட்டப்படாததால் தொடர்ந்து ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.